Thursday 11 July 2013

அறிமுகம்

வணக்கம்.

முதலில்  என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு முதுநிலை பட்டதாரி ஆசிரியை.தற்பொழுது பணி ஓய்வு பெற்று குடும்பத்தினரோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்.
நான் இங்கு குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் கர்ண பரம்பரைக் கதைகள் அறிய வேண்டிய விஷயங்கள், ஆன்மீகம் மற்றும் எனக்குத் தெரிந்த நல்ல விஷயங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று யோசித்துள்ளேன்.
முதலில் காயத்திரி மந்திரத்தின் மஹிமையை பற்றி என் தந்தையார் கூறிய ஒரு கதையை எழுதி அவரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

காயத்ரி மந்திரம்

ஓம்
பூர்ப் புவஸ்ஸுவ:
தத்ஸவி துர்வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்.

மாங்குடி ஒரு பழமயான கிராமம். அங்கு வெங்கடராம சாஸ்திரிகள் என்ற மாபெரும் பண்டிதர் இருந்தார். அவர் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருவார்.அத்துடன் ஊரில் உள்ள பெரியவர் சிறியவர் அனைவருக்கும் காயத்ரி மந்திரத்தை கற்பித்து வந்தார்
அந்த ஊரில் இராமசாமி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார். அவரிடம் இரு பசு மாடுகள் இருந்தன. அவர் தினமும் அவற்றை பக்கத்து கிராமத்துக்கு ஓட்டிச் சென்று பாலை விற்பனை செய்துவிட்டு மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மாலை வீடு திரும்புவார்.

வியாபாரத்திற்கு செல்லும் பொழுதும் வரும் பொழுதும் ஆற்றங்கரை வழியாகத்தான் செல்லுவார். அப்பொழுது சாஸ்திரிகளின் மந்திரத்தைக் கேட்டுக்கொண்டடே செல்லுவார். ஒரு நாள் சாஸ்த்திரிகளிடம் மந்திரத்தின் மஹிமயைப் பற்றிக் கேட்டார். அதற்கு சாஸ்த்திரிகள் இதன் மஹிமயைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம், உங்களுக்கு  தேவையானவற்றை மட்டும் கூறுகிறேன் என்றார், எவர் ஒருவர் இதை தினமும் பாராயணம் செய்து வருகிறாறோ அவருக்கு மனோபலம், தைரியம்,புத்திகூர்மை உண்டாகும்.தீய சக்திகள் அண்டாது என்றார்.அதற்கு அவர் சாமிமந்திரத்தாலே மாயாஜாலம் காட்டலாம் என்கிறீர்கள் என்றவாறே சிரித்தார் ராமசாமி பசு மாடு  என்கிற இரு தெய்வங்களைஅருகிலேயே வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்  என்றார், இராமசாமி நக்கலாக சிரித்துக்  கொண்டே சென்றார்.
அன்று இரவு இராமசாமி சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்ப மிகவும் நேரமாகி விட்டது. கிராமத்திற்கு வரும் வழியில் பெரிய காட்டை  கடந்து செல்ல வேண்டும்.காடு இடுகாடும் சுடுகாடும் சூழ்ந்த இடம். இராமசாமி இயற்கையிலேயே மிகவும் தைரியமானவர் மாடுகளுடன் காட்டை கடந்து வந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒரு குரல் அவரை ராமசாமி ராமசாமி என்று அழைத்தது.நடுக்காட்டில்  தன்னை அழைப்பது யார் என்று பார்த்தார்.அவர் நடக்க நடக்க அந்த குரல் அருகிலே கேட்க ஆரம்பித்தது.இராமசாமிக்கு அந்த குரல் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பொன்னம்மாவின் குரல் போல் இருந்தது. ராமசாமி மிகவும் பயந்து விட்டார்.உடலெல்லாம் வியர்த்து விட்டது. இன்னும் கிராமம் போய் சேர ஒரு மணி நேரமாகும் என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார்.உடன் சாஸ்த்திரிகளின் நினைவு வந்தது. ராமசாமி இரு மாடுகளையும் பக்கத்துக்கு ஒன்றாக நிறுத்தி தான் நடுவில் நின்று கொண்டு சத்தமாக காயத்ரி மந்திரத்தை கூறிக்கொண்டே வந்தார். மந்திர சத்தம் கேட்க கேட்க தொடர்ந்து வந்த குரல் நின்று விட்டது. ராமசாமியும் ஊர் வந்து சேர்ந்தார்.
மறு நாள் காலை ஆற்றங்கரையில் சாஸ்த்திகளை சந்தித்து அவரின் பாதங்களில் விழுந்து வணங்கி நடந்த சம்பவத்தை கூறி தன்னை காயத்ரி மந்திரம் தான் காப்பாற்றியது என்பதைக் கூறி அன்று முதல் அவரும் சாஸ்த்திரிகளிடம் முறையாகா ஜபத்தை கற்றுக்கொண்டார். நம் முன்னோர்கள் நமக்காக எத்தனயோ மந்திரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள் அவற்றின் பாரம்பரியத்தை ஓரளவாது காப்பாற்றுவோமாக
நன்றி,,........... வணக்கம்.