Friday 23 August 2013

குழந்தையும் தெய்வமும் ஒன்று

 திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த சீனு தாத்தா தன் பழுதாகப்போன நூல் கட்டிய மூக்கு கண்ணாடியைத் தேடினார். அவர் அருகில் அமர்ந்திருந்த அவர் மனைவி பங்கஜம் இப்பொழுது எதற்கு உடைந்து போன கண்ணாடியைத் தேடுகிறீர்கள் என்றாள்.அம்மாடி, நம் பேரன் சுரேஷ் மற்ற குழந்தைகளுடன் வாசலில் விளையாடிக்கொண்டிருக்கிறான்.அந்த காட்சியையாவது பார்க்கலாமே என்றுதான்.உனக்கு தெரியாததா அவனுடைய அப்பா அம்மா அவனை நம்மிடம் நெருங்கவிட மாட்டார்கள் நம் பிள்ளையும் மிகவும் மாறி விட்டான் என்று வருத்தப்பட்டார். எங்கு தேடியும் கண்ணாடி கிடைக்கவில்லை.மகனிடம் அப்பா என் கண்ணடியைக் காணவில்லை என்றார். அவருக்கு மருமகள் பதில் கூறினாள். ஆமாம் , தங்கக் கண்ணாடி திருடன் தூக்கிக் கொண்டு போய் இருப்பான். கண்ணாடி போட்டுண்டு என்ன கார்யத்தை வெட்டி முறிக்கப்போ றேளோ அதை கண்ணாடி இல்லாமலேயே முறியுங்கோ என்றாள். உமா அவர் உன் மாமனார் கொஞ்சம் மரியாதையாகப் பேசு என்றாள் பங்கஜம். நீங்க வாய மூடுங்கோ என்றாள் உமா.சீனு தன் கண்களால் மனைவியை அடக்கினார்.இரவு வந்தது. சீனு தாத்தா தனக்கு ஒரு கிழிந்த பாயை விரித்துக் கொண்டு பாட்டிக்கும் ஒரு பாயை விரித்தார். பங்கஜம் நிம்மதியாகத் தூங்கு என்றார். எப்படிங்க தூக்கம் வரும் நாம என்ன பாபம் பண்ணினோம். ஏன் கடவுள் நம்மை சோதிக்கிறான். என்று வருந்தினாள். வ்ருந்ததே பங்கஜம் பகவான் கிருஷ்ணண் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன் என்று கூறினார் இல்லையா அவர் அவதரித்து நம் பிரச்சனையைத் தீர்ப்பார்.கவலைப் படாமல் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டே தூங்கு என்றார்.
மறுநாள் பொழுது விடிந்தது. அன்று சனிக்கிழமை. தன் காலைக்கடங்களை எல்லாம் முடித்துக்கொண்டு கணவன் மனைவி இருவரும் திண்ணையில் வந்து அமர்ந்தனர். பங்கஜம் நல்ல நாளிலேயே சாப்பாடு 11 மணிக்குதான் இன்று ஆபிஸ் விடுமுறை வேறு. எப்போ படி அளக்கப்போறானோ பகவான் தெரியவில்லை என்றார்.ஊம்.... பகவான கிருஷ்ணண் வருவார் என்றாள் பங்கஜம் சிரித்துக் கொண்டே. நக்கலா என்றார் சீனு. ஊஹும் விக்கல் என்றாள்.
பங்கஜம் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.ஆபிஸ் விஷயமாக ஒரு சமயம் காஞ்சிபுரம் போய் இருந்தேன். வரதராஜ பெருமாளை கும்பிட கோயிலுக்கு போய் இருந்தேன். நேரம் இல்லாததால் வாசலில் நின்றவாறே உரத்த குரலில் உணர்ச்சி பொங்க "க்ஞ்சி வரதப்பா" என்று 3 முறை கூறினேன்.பசியை பொறுக்க முடியாமல் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் ஒருவன் என் அருகில் வந்து எங்கப்பா வரது. என்று கேட்டான்.நான் உரக்க சிரித்தேன்.அவன் அவமானத்தால் குறுகிப்போனான். நான் அவனுக்கு 10 ரூ கொடுத்து விட்டு வந்தேன்.இப்பொழுது அவன் நிலை எனக்கு வந்துவிட்டது பார்த்தாயா என்று கூறிய கணவனை கண்ணீருடன் பார்த்தாள் பங்கஜம்.
உள்ளே அனைவரும் சாப்பிட்டு விட்டு கை அலம்பும் சத்தம் கேட்டது. கணவன் மனைவி இருவரும் சாப்பிடத் தயாரானார்கள் இருவரும் தன்னுடைய அலுமினிய தட்டையும் டம்பளரையும் தேடினர்ர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மருமகள் சாப்பட்டுடன் வெளியில் வந்தாள் இருவரும் கையை பிசைந்த வண்ணம் நின்ற்னர்.சீனு தாத்தா தட்டும் டம்பள்ரும் காணவில்லை என்றார் பத்ரகாளியானாள் உமா. தினமும் கண்ணாடியை காணும் செருப்பைக் காணும் தட்டைக் காணும் டம்பளரைக் காணும் என்று காணும் பாட்டு பாடி வருகிறீர்களே ஏதாவது பிளான் பண்ணுகிறீர்களா? இன்று பட்டினி கிடங்கள் என்று கூறி விட்டு கதவை மூடிக்கொண்டு உள்ளே போனாள்-பங்கஜம் இன்று சனிக்கிழமை அத்துடன் ஏகாதசி வேறு பட்டினி கிடந்தால் உடம்பும் நன்றாக இருக்கும் புண்ணியமும் கிடைக்கும் என்றார் சீனு.விரக்தியாக பேசும் கணவனை கண்ணீருடன் நோக்கிய பங்கஜம் கண்ணன் வந்து காப்பாற்றுவான் பக்கத்து குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு படுங்கள் என்றாள்.வருவான் வருவான் பார்த்துக் கொண்டே இரு என்றரர் கணவரின் நம்பிக்கையை தடுப்பானேன் என்று மௌனமாக இருந்தாள் பங்கஜம்.
சிறிது நேரம் கழித்து உள்ளே இருந்து சந்துருவின் குரல் உரத்து கேட்டது. இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். உமாஆஆஆ.....காலையில் நான் பார்த்துக் கொண்டிருந்த முக்கியமான் ஆபிஸ் ஃபயில் எங்கே ? இங்கேதானே வைத்தேன் . தேடு என்றான்.இருவரும் சண்டை போட்ட வண்ணம் வீடு முழுவதும் தேடினார்கள் ஃபயில் கிடைக்கவில்லை.
ஏங்க சுரேஷின் அலமாரியைப் பாருங்கள் குழந்தை விளையாட்டாக எடுத்து வைத்திருக்கப்போறான் என்றாள் உமா. அலமாரியைத் திறந்தான் சந்துரு அதிலிருந்து கீழே விழுந்த சாமான் களைக்கண்டதும் கணவன் மனைவி இருவரும் திடுக்கிட்டனர்.தாத்தாவின் பிஞ்சுபோன செருப்புகள். உடைந்து போன மூக்கு கண்ணாடி, பாட்டியின் கிழிந்து போன பாய், இருவரின் அலுமினியத் தட்டுகள் டம்பளர்கள். ஆகியவை அனைத்தையும் ஒரு பையில் போட்டு வைத்திருந்தான். அவற்றைக் கண்டதும் கணவன் மனைவி இருவரின் கோபம் தலைக்கேறியது.விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்து பளீர்" என்று முதுகில் வைத்தாள் உமா. ஏண்டா..உனக்கு பைத்தியமா பிடித்திருக்கு, விளையாட வேறு சாமான் களா இல்லை என்றவாறே அவற்றை வெளியில் தூக்கி எறிந்தாள் அழுது கொண்டே மீண்டும் அவற்றை எடுத்து பையில் அடுக்கினான் சுரேஷ்.சந்துருக்கு கோபம் எல்லை மீறியது. மகனை அடிக்க கை ஓங்கினான். அப்பா என்று அலறிய மகன் ஏதோ சொல்ல வந்ததை கவனித்தான். என்னடா சொல்லித்தொலை ? அப்பா நீயும் அம்மாவும் பெரியவர்களாவீர்கள் இல்லையா ? அப்ப நானும் உன்னை மாதிரி பெரியவனாவேன். எனக்கும் அம்மா மாதிரி பொண்டாட்டி வருவா. அப்ப உங்க ரண்டு பேரையும் திண்ணையில் உக்காத்தி வச்சு சாதம் போடனும் இல்லையா? செருப்பு தரணும், கண்ணாடி தரணும், போர்வை தரணும் இல்லையா ?அப்ப இதுக்கெல்லாம் எங்கே போவேன். அதுக்குத்தான் அப்பா இதெல்லாம் இன்னிலேர்ந்து சேர்த்து வைத்து இருக்கேன். நேத்திக்கி ராத்திரி நீங்க ரண்டு பேரும் விலை வாசி ஏறிப் போச்சு என்று பேசிக்கொண்டிருந்தீர்களே அதான் உங்களுக்காக பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். தப்பா அப்பா ? என்று கேட்ட மகனைப் பார்த்த சந்துருவும் உமாவும் வாயடைத்து நின்றனர் சுரேஷ் ஒன்றும் புரியாமல் பையை அலமாரியில் வைத்து விட்டு விளையாடச் சென்றான் குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் சந்துரு தன் அறைக்கும் உமா சமயல் கட்டுக்கும் சென்றனர்.இரவு வந்தது.உமாவும் சந்துரும் திண்ணைக்கு வந்தனர். பெற்றோரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டனர்.தாங்கள் செய்த கொடுமயை எண்ணி வெட்கப்பட்டனர். பெற்றோராயிற்றே ? மகனையும் மருமகளையும் வாரி அணைத்துக் கொண்டு தேற்றி அனைத்தையும் மற்ந்து மன்னித்தனர்.
இருவரையும் சாப்பிட உள்ளே அழைத்தனர். தாத்தா பாட்டி சந்துரு சுரேஷ் அனைவரும் டேபிளில் அமர உமா பரிமாரினாள் அப்பா உங்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பொறியலும் அம்மா உங்களுக்கு பிடித்த கத்திரிக்காய் சாம்பாரும் பண்ணிருக்கேன் நன்றாக் சாப்பிடுங்கள் என்ராள்.நீண்ட நாட்களுக்குப் பிறகு தம்பதியர் இருவரும் வயிறார உண்டனர். உமா மகனை அழைத்தாள்" சுரேஷ் நீ இன்னிக்கு தாத்தா பாட்டிகிட்டே படுத்துக்கோ" என்றாள். ஒன்றும் புரியாத சுரேஷ் கட்டிலில் ஏறி தாத்தா பாட்டி இருவருக்கும் நடுவில் படுத்துக் கொண்டு இருவர் மேலும் காலைத் தூக்கி போட்டுக்கொண்டி நிமமதியாகத் தூங்கினான்.பங்கஜம் தூங்கிட்டையா? சீனு மனைவியை அழைத்தார். இல்லை சொல்லுங்க ? என்றாள் பங்கஜம். கிருஷ்ணண் வருவானா ? என்றாயே குழந்தை வடிவில் வந்து நம் துன்பத்தை போக்கி விட்டான் பார்தாயா ? என்றார். .ஆமாங்க என்ற பங்கஜம் பேரனை இறுக அணைத்துக் கொண்டு தூங்கினாள்.
பக்கத்து அறையில் படுத்திருந்த உமாவும் சந்துருவும் தாங்கள் செய்த தவறுகளை எண்ணி எண்ணி வருந்தினார்கள். தந்தைக்கு உபதேசம் செய்த குமரனாக் தன் மகனை நினைத்தான் சந்துரு,தன்னை பெரிய பாபத்திலிருந்து தன் மகன் காப்பாற்றியதாக எண்ணினாள் உமா குழந்தை கூறி தன் தவறுகளைத் தெரிந்து கொண்ட அவலத்தை எண்ணி எண்ணி இருவரும் வெட்கப்பட்டனர்.பிறகு ஒருவருக்கொருவர் சமாதானமாகி இனி பெற்றோரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு நிம்மதியாக் உற்ங்கினார்கள்.
நம்முடைய குழந்தை நம்மை கடைசி காலத்தில் நிம்மதியாக வைத்துக் கொள்ளுவான், வைத்துக் கொள்ளவேண்டும் என்று எல்லா பெற்றோரும் ஆசை படுவது நியாயமான ஒன்றுதான இந்த நியாயங்கள் சில வேளைகளில் திசை மாறும் போதுதான் பிரச்சனைகள் எழுகின்றன.
பிரச்சனைகள் ஏன் எழுகின்றன? அதை எப்படி தீர்க்கலாம். சற்று யோசித்துப் பார்ப்போம்.முன்பெல்லாம் அதாவது அரசர்கள் காலத்தில் வானப்பிரஸ்தம் என்பது அரச தர்மங்களில் ஒன்றாகும் அதாவது அரசன் தன் பணிகளை மகனிடம் ஒப்படைத்து விட்டு வனத்திற்குச்சென்று தியானத்தில் ஈடுபடுவது.ஆனால் அது இந்த காலத்திற்கு ஒத்துவராத ஒன்று.
இந்தக்கதையில் உமா,சந்துரு இருவரும் குழந்தையின் செயலால் மாறினார்கள்.எல்லோருமே இவர்கள் போல் மாறுவார்கள் என்பது நிச்சயமில்லாத ஒன்று. மேலும் இந்த காலத்து குழந்தைகள் சுரேஷ் போல் இருப்பார்களா என்பதும் சந்தேகம் தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின்பு அவன் நல்லவன் ஆவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பிலே.அதனால் நாம் நல்ல நெறிகளை பின் பற்றி நம் குழந்தைகளும் நம்மை பின் தொடர வைப்போம்.
இந்த காலத்தில் தெருவிற்கு தெரு முதியோர் இல்லம் இருக்கிறது.அதுவும் நிரம்பி வழிகிறது.ஏன் இந்த அவல நிலை?
கூடிய வரை இதைத்தடுப்போம்.
வீட்டில் வயதானவர்கள் இருந்தால்:-அவர்களை உணவு உண்ணுவதற்கு இனிமையாக அழையுங்கள். அவர்களை மரியாதையாக அழையுங்கள்.கூடிய வரை சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கேட்டு செய்யுங்கள். அவர்களின் எதிரில் ஒருவரோடு ஒருவர் சண்டை போடாதீர்கள். அனைவரும் இரவு ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுங்கள்.ஆபீஸிலிருந்து வந்ததும் பெற்றோரின் அருகில் அமர்ந்து அன்புடன் சிறிது நேரம் எதையாவது பேசுங்கள். அப்பொழுதுதான் தன் மகன் தங்களை அலட்சியம் செய்யவில்லை என்று சந்தோஷப் படுவார்கள் கூடியவரை உங்கள் குழந்தைகளை அவர்களுடன் பழகவிடுங்கள்.சிலசமயம் பிரச்சனை பெரியவர்களிடம் கூட இருக்கும்.வயதாக வயதாக புத்தி தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. சில வேளைகளில் அதுவே பிரச்சனையாக மாறும்.பெரியவர்கள் மனதிலும் பெரியவர்களாக நடந்து கொள்ளுங்கள்.கூடிய வரை குடும்ப விஷயங்களில் தலையிடாமல் மகனும் மருமகளும் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று ஒதுங்கி இருங்கள்.அவர்கள் தங்கள் குழந்தைகளை கண்டிக்கும் பொழுது குறுக்கே போகாதீர்கள். மருமகளை தன் மகளைப் போல் பாவியுங்கள்.மகனையும் மருமகளையும் ஒன்றாக எண்ணுங்கள். ஏனெனில் அவள் உங்கள் வம்சத்தை பெருக்கவந்தவள்.
மருமகள் தம்மை அப்பா அம்மா வாக நினைக்க வேண்டும் என்று எண்ணுகிற நாம் நம் மகன் அவளுடைய பெற்றோரை அப்பா அம்மா என்று அழைப்பதைக் குற்றமாகக் கருதாதீர்கள்.
வாழ்க்கையில் பணம் காசு எல்லாம் அன்பு பாசத்திற்கு முன்னால் தூசுக்கு சமானம். குறைந்த வருமான குடும்பமாக இருந்தாலும் அன்பும் அனுசரனையும். விட்டுக்கொடுக்கும் இயல்பும் ஒரு குடும்பத்தில் இருந்தால் அங்கு நிச்சயம் சந்தோஷம் இருக்கும்.
பிறகு என்ன ? முதியோர்களை மதிப்போம்-அன்பு செலுத்துவோம்-வாழ்க்கையை இன்பமாக ஆக்குவோம்-முதியோர் இல்லங்களை நம்மால் முடிந்த வரை குறைப்போம்----

நன்றி ---வணக்கங்களுடன்-----உங்கள் ----அம்மா.......அல்லது........சகோதரி;.........

Thursday 11 July 2013

அறிமுகம்

வணக்கம்.

முதலில்  என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு முதுநிலை பட்டதாரி ஆசிரியை.தற்பொழுது பணி ஓய்வு பெற்று குடும்பத்தினரோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்.
நான் இங்கு குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் கர்ண பரம்பரைக் கதைகள் அறிய வேண்டிய விஷயங்கள், ஆன்மீகம் மற்றும் எனக்குத் தெரிந்த நல்ல விஷயங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று யோசித்துள்ளேன்.
முதலில் காயத்திரி மந்திரத்தின் மஹிமையை பற்றி என் தந்தையார் கூறிய ஒரு கதையை எழுதி அவரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

காயத்ரி மந்திரம்

ஓம்
பூர்ப் புவஸ்ஸுவ:
தத்ஸவி துர்வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்.

மாங்குடி ஒரு பழமயான கிராமம். அங்கு வெங்கடராம சாஸ்திரிகள் என்ற மாபெரும் பண்டிதர் இருந்தார். அவர் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருவார்.அத்துடன் ஊரில் உள்ள பெரியவர் சிறியவர் அனைவருக்கும் காயத்ரி மந்திரத்தை கற்பித்து வந்தார்
அந்த ஊரில் இராமசாமி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார். அவரிடம் இரு பசு மாடுகள் இருந்தன. அவர் தினமும் அவற்றை பக்கத்து கிராமத்துக்கு ஓட்டிச் சென்று பாலை விற்பனை செய்துவிட்டு மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மாலை வீடு திரும்புவார்.

வியாபாரத்திற்கு செல்லும் பொழுதும் வரும் பொழுதும் ஆற்றங்கரை வழியாகத்தான் செல்லுவார். அப்பொழுது சாஸ்திரிகளின் மந்திரத்தைக் கேட்டுக்கொண்டடே செல்லுவார். ஒரு நாள் சாஸ்த்திரிகளிடம் மந்திரத்தின் மஹிமயைப் பற்றிக் கேட்டார். அதற்கு சாஸ்த்திரிகள் இதன் மஹிமயைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம், உங்களுக்கு  தேவையானவற்றை மட்டும் கூறுகிறேன் என்றார், எவர் ஒருவர் இதை தினமும் பாராயணம் செய்து வருகிறாறோ அவருக்கு மனோபலம், தைரியம்,புத்திகூர்மை உண்டாகும்.தீய சக்திகள் அண்டாது என்றார்.அதற்கு அவர் சாமிமந்திரத்தாலே மாயாஜாலம் காட்டலாம் என்கிறீர்கள் என்றவாறே சிரித்தார் ராமசாமி பசு மாடு  என்கிற இரு தெய்வங்களைஅருகிலேயே வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்  என்றார், இராமசாமி நக்கலாக சிரித்துக்  கொண்டே சென்றார்.
அன்று இரவு இராமசாமி சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்ப மிகவும் நேரமாகி விட்டது. கிராமத்திற்கு வரும் வழியில் பெரிய காட்டை  கடந்து செல்ல வேண்டும்.காடு இடுகாடும் சுடுகாடும் சூழ்ந்த இடம். இராமசாமி இயற்கையிலேயே மிகவும் தைரியமானவர் மாடுகளுடன் காட்டை கடந்து வந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒரு குரல் அவரை ராமசாமி ராமசாமி என்று அழைத்தது.நடுக்காட்டில்  தன்னை அழைப்பது யார் என்று பார்த்தார்.அவர் நடக்க நடக்க அந்த குரல் அருகிலே கேட்க ஆரம்பித்தது.இராமசாமிக்கு அந்த குரல் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பொன்னம்மாவின் குரல் போல் இருந்தது. ராமசாமி மிகவும் பயந்து விட்டார்.உடலெல்லாம் வியர்த்து விட்டது. இன்னும் கிராமம் போய் சேர ஒரு மணி நேரமாகும் என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார்.உடன் சாஸ்த்திரிகளின் நினைவு வந்தது. ராமசாமி இரு மாடுகளையும் பக்கத்துக்கு ஒன்றாக நிறுத்தி தான் நடுவில் நின்று கொண்டு சத்தமாக காயத்ரி மந்திரத்தை கூறிக்கொண்டே வந்தார். மந்திர சத்தம் கேட்க கேட்க தொடர்ந்து வந்த குரல் நின்று விட்டது. ராமசாமியும் ஊர் வந்து சேர்ந்தார்.
மறு நாள் காலை ஆற்றங்கரையில் சாஸ்த்திகளை சந்தித்து அவரின் பாதங்களில் விழுந்து வணங்கி நடந்த சம்பவத்தை கூறி தன்னை காயத்ரி மந்திரம் தான் காப்பாற்றியது என்பதைக் கூறி அன்று முதல் அவரும் சாஸ்த்திரிகளிடம் முறையாகா ஜபத்தை கற்றுக்கொண்டார். நம் முன்னோர்கள் நமக்காக எத்தனயோ மந்திரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள் அவற்றின் பாரம்பரியத்தை ஓரளவாது காப்பாற்றுவோமாக
நன்றி,,........... வணக்கம்.